இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சுற்றுலா வேன்களில் மதுபுட்டிகள் கடத்தல்: திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் கைது

புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலிருந்து சுற்றுலா வேன்களில் மது புட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற திருப்பூரைச் சேர்ந்த 3 பேரை நாகூர் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 5:42 am IST

புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலிருந்து சுற்றுலா வேன்களில் மது புட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற திருப்பூரைச் சேர்ந்த 3 பேரை நாகூர் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
நாகூர் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன், சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார், சனிக்கிழமை வாஞ்சூர் சோதனைச் சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலிலிருந்து வந்த 3 சுற்றுலா வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையின் போது, அந்த வேன்களில் சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மதுபுட்டிகள் கடத்தப்பட்டது தெரியவந்தது. 
இதையடுத்து, 3 சுற்றுலா வேன்களையும், மதுபுட்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸார்,  வேன் ஓட்டுநர்களான திருப்பூர், பெரியார் காலனியைச் சேர்ந்த பி. சுபேர்சேட் (31),  அவினாசி சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஜெ. இமானுவேல் (38), கூனம்பாடி ஈஸ்வரன்கோயில் தெருவைச் சேர்ந்த க. ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.