காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஆர்.வி. கல்லூரி வாரியத் தேர்வில் மாநில அளவில் முதலிடம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள செம்போடை ஆர்.வி. கல்லூரி, பல்தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கான வாரியத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள செம்போடை ஆர்.வி. கல்லூரி, பல்தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கான வாரியத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
2018 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் வாரியத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், செம்போடை ஆர்.வி. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர். இக்கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு மாணவி து. சுமித்ரா மேரி 700-க்கு 699 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். 
20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100-க்கு100 மதிப்பெண்கள் பெற்றனர். எட்டு விரிவுரையாளர்கள் தாங்கள் கையாண்ட பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி அளித்துள்ளனர். மேலும், 11 பாடங்களில் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சியையும், 11 பாடங்களில் 80 சதவீதத்துக்கு மேலான தேர்ச்சியையும் அடைந்துள்ளனர். தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் தேர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களை கல்லூரி நிறுவனர் டாக்டர் ஆர். வரதராஜன், கல்லூரிச் செயலர் ஆர்.வி. செந்தில், ஆர்.வி. பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் யோகானந்த், ஆர்.வி. பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலமுருகன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.