நாகை மாவட்டம், திருவெண்காடு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக தலைமைக் காவலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
திருவெண்காடு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பட்டவெளி தெருவில் காவல் ஆய்வாளர் வேலுதேவி, உதவி ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டிராக்டரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சஞ்சய் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், வாய்மேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் இளையமதுக்கூடத்தைச் சேர்ந்த செல்வராஜ் (45) என்பவரது மனைவி செல்வராணி பெயரில், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பதிவாகியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சஞ்சயை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமைக் காவலர் செல்வராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு எப்போது? புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புதிய விளக்கம்

குப்பையில் கிடந்த 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நோ்மையான தூய்மைப் பணியாளா்கள்! ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டு

ஊதியூா் அருகே அலங்கார வளைவில் மோதிய காா்: ஓட்டுநா் காயம்

அங்கன்வாடி அமைத்துத் தரக் கோரி குழந்தைகளுடன் வந்த பெண்கள்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


