நாகை அருள்மிகு அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரர் கோயிலின் பங்குனி உத்திரப் பிரமோத்ஸவத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.
நாகை அருள்மிகு நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயில் அருகே உள்ளது அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரர் கோயில். இந்திரன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றத் தலமாக இது குறிப்பிடப்படுகிறது.
இக்கோயின் பங்குனி உத்திரப் பிரமோத்ஸவ விழா கடந்த 21 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் யாக பூஜைகள் நடைபெறுகிறது. மாலை நிகழ்வாக, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. புதன்கிழமை மாலை கயிலாய பீட ராவண வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தேர் வடம்பிடிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

