வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நாகை அமரநந்தீசுவரர் கோயில் தேரோட்டம்: இன்று நடைபெறுகிறது

நாகை அருள்மிகு அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரர் கோயிலின் பங்குனி உத்திரப் பிரமோத்ஸவத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.

Updated On :29 மார்ச் 2018, 4:03 am

நாகை அருள்மிகு அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரர் கோயிலின் பங்குனி உத்திரப் பிரமோத்ஸவத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.
நாகை அருள்மிகு நீலாயதாட்சியம்மன் உடனுறை  காயாரோகணசுவாமி கோயில் அருகே உள்ளது அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரர் கோயில். இந்திரன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றத் தலமாக இது குறிப்பிடப்படுகிறது.
இக்கோயின் பங்குனி உத்திரப் பிரமோத்ஸவ விழா கடந்த 21 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் யாக பூஜைகள் நடைபெறுகிறது. மாலை நிகழ்வாக, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. புதன்கிழமை மாலை கயிலாய பீட ராவண வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தேர் வடம்பிடிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.