நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் குளிர்பானக் கடையில் அரிவாளைக் காட்டி மிரட்டி, பணம் பறித்த நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையைச் சேர்ந்தவர் பா. சிவக்குமார் (34). குளிர்பானங்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை கடையில் இருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ.2,500-ஐ அவரிடம் இருந்து பறித்துச் சென்றாராம். அப்போது, அங்கு ரோந்து பணியிலிருந்த போலீஸார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் மேற்கு மாதாக்கோயில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்குமரன் (34) என்பது தெரியவந்தது. போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து அரிவாள் மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

