விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம், நாகையை அடுத்த நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேதாரண்யம் கஸ்தூர்பாய் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேசிய பசுமைப்படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சூழல் பொறியாளர் ராமசுப்பு, கருத்தாளர் செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விளக்கிப் பேசினர். கருத்தரங்க நிறைவில், மாணவர்கள் உறுதி மொழியேற்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேலு, ஆசிரியர்கள் ரகு, அருள் ஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அயூப் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் பிரியா வரவேற்றார். கற்பகவள்ளி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


