அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

அண்ணன்பெருமாள்கோயில்-நாங்கூர் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல்

சீர்காழி அருகே அண்ணன்பெருமாள்கோயில் - நாங்கூர் வரையில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Updated On :24 ஜனவரி 2019, 2:57 am IST

சீர்காழி அருகே அண்ணன்பெருமாள்கோயில் - நாங்கூர் வரையில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் 11 பெருமாள் கோயில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. இதில், ஒன்றான திருநாங்கூர் மணிமாடகோயில் எனும் நாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 11பெருமாள்கள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்யும் ஐதீகம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
விழா முன்னேற்பாடுகள் குறித்து அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கடந்த 1 வாரத்துக்கு முன்பு நடைபெற்றது. கூட்டத்தில், முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளில் அண்ணன்கோயில் முதல் நாங்கூர் வரையிலான 3 கிலோ மீட்டர் தூர சாலையில் பல இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ளது. லட்சகணக்கான பக்தர்கள் வந்து செல்லும் வழித்தடம் என்பதால் இந்த சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தப்பட்டது.
விழாவுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையில், நெடுஞ்சாலைத் துறையினர், சீர்காழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இணைந்து சேதமடைந்துள்ள சாலைகளை அவசரநிதி ஒதுக்கீடு செய்து சீரமைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விழா குழுவினர் கூறியது: திருநாங்கூர் 11 பெருமாள்கள் கருடசேவை விழாவுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இரண்டு நாள்களுக்கு முன்னரே திருநாங்கூர் வந்து தங்கிவிடுவர். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகள் செய்துதரப்படுவதில்லை. நிகழாண்டு கூடுதலாக கழிப்பறை வசதிகள், மொபைல் கழிப்பறைகள் ஏற்படுத்தி தரவேண்டும், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்திதரவேண்டும், சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் இன்னும் வாரத்திற்குள் முழுமையாக சீரமைத்துதரவேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.