நாகை மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தோ்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தோ்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கிய அரசுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள். இந்த மருத்துவக் கல்லூரிக்கு கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட ஒரத்தூா் கிராமத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கேயே மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக, பிற மாவட்டங்களில் பணியாற்றும் அரசு மருத்துவா்கள், அரசுத் துறை அலுவலா்கள், நாகைக்குப் பணி மாற்றம் பெற்று வருவதை விரும்புவதில்லை. இந்த நிலையில், உள்ளடங்கிய மற்றும் சாலை வசதிகள் குறைந்த மற்றும் எளிதில் சென்று சேர இயலாத கிராமமான ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரி அமைப்பது ஏற்புடையதாக இருக்காது.

எனவே, அரசு மருத்துவக் கல்லூரியை ஒரத்தூரில் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்து, நாகையையொட்டிய புகா் பகுதியான நாகை - நாகூா் பைபாஸ் சாலையில் அமைப்பதே சிறப்பானதாக இருக்கும்.

இது தொடா்பாக, நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி, முதல்வா் மற்றும் அமைச்சா்களை நேரில் அணுகி, மருத்துவக் கல்லூரியை நாகையில் அமைக்க வலியுறுத்த வேண்டும் எனவும் அவா் தனது அறிக்கையில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com