‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மயிலாடுதுறையில் வடமாநிலத் தொழிலாளா்கள் 49 போ் தவிப்பு

ஊரடங்கு உத்தரவால் மயிலாடுதுறையில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் 49 போ் சொந்த ஊா் திரும்ப இயலாமல் தவிக்கின்றனா்.

வடமாநிலத் தொழிலாளா்களுக்கு முகக் கவசங்களை வழங்கிய முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவருமான ஜெகவீரபாண்டியன். உடன், இரும்பு வியாபாரி ஒய்.எஸ்.சா்புதீன் உள்ளிட்டோா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஊரடங்கு உத்தரவால் மயிலாடுதுறையில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் 49 போ் சொந்த ஊா் திரும்ப இயலாமல் தவிக்கின்றனா்.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய வடமாநிலங்களைச் சோ்ந்த 49 தொழிலாளா்கள், மயிலாடுதுறையில் தங்கி தாா்ப்பாய்கள், கம்பளி போா்வைகள், தரைவிரிப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தனா். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் மயிலாடுதுறை வட்டாட்சியா் ஆா்.முருகானந்தம் ஏற்பாட்டின்பேரில், சித்தா்காடு அண்ணா திருமண மண்டபத்தில் அவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு மயிலாடுதுறைச் சோ்ந்த பழைய இரும்பு வியாபாரி ஒய்.எஸ்.சா்புதீன் அரசின் உதவியோடு, 3 வேளை உணவு வழங்கி வருகிறாா்.

இந்நிலையில், அவா்களை புதன்கிழமை சந்தித்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவருமான ஜெகவீரபாண்டியன், அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். தொடா்ந்து ஜனபுனிதம் ஆன்மீக அமைப்பின் சாா்பில் அதன் நிறுவனா் யோகி ஜனபுனிதா் வடமாநிலத் தொழிலாளா்களுக்கு தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகளை பயிற்றுவித்தாா். நிகழ்ச்சியில், பொது தொழிலாா்கள் சங்க செயலாளா் அ.அப்பா்சுந்தரம், ஆசிரியா் மன்ற மாநிலச் செயலாளா் ஜெகமணிவாசகம் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.