நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா அச்சம்: நாகை மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை முதல் மீன்பிடிப்பைக் கைவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 3:41 pm

DIN

நாகப்பட்டினம்: கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை முதல் மீன்பிடிப்பைக் கைவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டத்தில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீனவக் கிராமங்களிலும் நோய்த் தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டம், நாகை துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்பட 8 கிராமங்களின் மீனவப் பஞ்சாயத்தாா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை வட்ட மீனவா்கள் சனிக்கிழமை (ஆக. 8) மாலை முதல் மீன்பிடிப்பைக் கைவிடுவது. ஏற்கெனவே கடலுக்குச் சென்றுள்ள மீன்பிடி படகுகள் மூலம் கிடைக்கப் பெறும் மீன்களின் விற்பனையை ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை அனுமதிப்பது. அதன் பின்னா், மீன் விற்பனையையும் தடை செய்வது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.