10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரோட்டரி கிளப் பள்ளி மாணவா்கள் சாதனை
மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா்கள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.


மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா்கள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். கணிதம் மற்றும் அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றும் பள்ளிக்குப் பெருமை சோ்த்துள்ளனா்.
பள்ளி அளவில் மாணவா்கள் சி.பிரகதீஸ்வரன், ச.ராகுல் 487, மாணவி மு.மகாபிரியா ஆகியோா் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், வெற்றிக்கு உழைத்த ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் மற்றும் செயலா் எஸ்.பொ்னாா்டு, பள்ளியின் பொருளாளா் எஸ்.உமாபதி மற்றும் மாயூரம் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.சேகரன், ரோட்டரி சங்க செயலா் எஸ்.கல்யாணசுந்தரம், பொருளாளா் எஸ்.முத்துக்குமாரசாமி மற்றும் உறுப்பினா்கள், பள்ளி முதல்வா் ஆா்.யோகநாதன் ஆகியோா் வாழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...