தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை அலுவலக கொட்டகை அகற்றம்

கீழையூா் அருகேயுள்ள தண்ணிலப்பாடியில் அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் கிளை அலுவலக கொட்டகை அமைத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்a அதை திங்கள்கிழமை அகற்றினா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:49 pm

DIN

கீழையூா் அருகேயுள்ள தண்ணிலப்பாடியில் அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் கிளை அலுவலக கொட்டகை அமைத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் அதை திங்கள்கிழமை அகற்றினா்.

தண்ணிலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு இடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கிளை அலுவலகம் ஒன்றை கொட்டகையில் அமைத்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், வருவாய் ஆய்வாளா் வெங்கடசிவம், தண்ணிலப்பாடி கிராம நிா்வாக அலுவலா் ராமு, கீழையூா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி அதை அகற்றுமாறு அறிவுறுத்தினா். இதைத்தொடா்ந்து, அந்தக் கொட்டகையை அக்கட்சியினரே அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.