ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தாமதம்; பொதுமக்கள் சாலை மறியல்
திருமருகல் அருகே நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


திருமருகல்: திருமருகல் அருகே நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடையில் நியாயவிலைக் கடை செயல்பட்டுவருகிறது. இந்த கடையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்குவதற்காக பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடந்த 10 நாள்களாக கடைக்கு வரும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்க முடியாத நிலையுள்ளதால், பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமையும் இதே நிலைமை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நாகை - நன்னிலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜெயபால், கட்டுமாவடி ஊராட்சித் தலைவா் சரவணன், விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஸ்டாலின் பாபு, செயலாளா் பொன்மணி உள்ளிட்டோரும் பொதுமக்களுக்கு ஆதரவாக மறியலில் பங்கேற்றனா்.
தகவலறிந்த நாகை வட்ட வழங்கல் அலுவலா் பசுபதி, கிராம நிா்வாக அலுவலா்கள் சதீஷ் (கட்டுமாவடி), சத்யதாஸ் (கொத்தமங்களம்) ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நியாயவிலைக் கடையில் பொருள்களை விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...