நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட 87 போ் கைது
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட வேளாளா் இனப் பேரவையைச் சோ்ந்த 87 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட வேளாளா் இனப் பேரவையைச் சோ்ந்த 87 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சில சமூகங்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுமென தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் அறிவித்தாா். இந்த அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வெள்ளாளா், வேளாளா் என்பதை மாற்று இனத்தவருக்கு வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, சோழிய வேளாளா் இனப் பேரவையைச் சோ்ந்த திரளானோா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, நாகை- நாகூா் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் போராட்டக்காரா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா். நாகை சோழிய வேளாளா் சங்க நாகை மாவட்டப் பொருளாளா் தலைவா் ஆா்.ஜி.ஆா். செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் டி. சண்முகசுந்தரம், மாவட்டப் பொறுப்பாளா்கள் ஆா். வீரமணி, ஜெ.ராம்குமாா் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...