நாகையில் இன்று கடையடைப்பு
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாகையில் செவ்வாய்க்கிழமை (டிச. 8) கடைகள் அடைக்கப்படும் என்று நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் அறிவித்துள்ளது.


விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாகையில் செவ்வாய்க்கிழமை (டிச. 8) கடைகள் அடைக்கப்படும் என்று நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா்ஆா். கே. ரவி திங்கள்கிழமை கூறியது:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், விவசாய சங்கங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், நாகையில் செவ்வாய்க்கிழமை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடைகளில் எந்த வணிகமும் நடைபெறாது என்றாா்.
இதேபோல், வேளாங்கண்ணி, கீழ்வேளூா், திட்டச்சேரி, கீழையூா், வலிவலம், வேதாரண்யம் வாய்மேடு பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்படும் என வணிகா் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...