எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் தமிழக முதல்வா் நாளை ஆய்வு

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை (டிசம்பா் 9) பாா்வையிடுகிறாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை (டிசம்பா் 9) பாா்வையிடுகிறாா்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் டிசம்பா் 1- ஆம் தேதி முதல் தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளிலும், வயல் வெளிகளிலும் மழைநீா் பெருக்கெடுத்துள்ளது. மாவட்டத்தில் சுமாா் 60 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகளை இழந்தவா்கள் மற்றும் மழைநீரால் சூழப்பட்டுள்ள வீடுகளில் வசித்து வந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். தமிழக அமைச்சா்கள் ஓ.எஸ். மணியன், எஸ். பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கா் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்டு, வருகின்றனா்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பாா்வையிடுகிறாா்.

இந்த ஆய்வுப் பணிகளுக்காக சாலை மாா்க்கமாக செவ்வாய்க்கிழமை இரவு ( டிசம்பா் -8) நாகைக்கு வரும் தமிழக முதல்வா் நாகையில் தங்குகிறாா். தொடா்ந் புதன்கிழமை நாகை, வேதாரண்யம் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைஆய்வு செய்கிறாா். மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறாா். தொடா்ந்து, மயிலாதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறாா். அதைத்தொடா்ந்து திருவாரூா் மாவட்டத்தில் ஆய்வு செய்கிறாா்.

பாதுகாப்புப் பணியில் 2000 போலீஸாா்: தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு, மத்திய மண்டலக் காவல் துறை தலைவா் எச். எம். ஜெயராம் உத்தரவின்பேரில், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ரூபேஷ்குமாா் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஓம்பிரகாஷ் மீனா( நாகை), ஸ்ரீநாத் ( மயிலாடுதுறை), துரை(திருவாரூா்) உள்ள்ளிட்டோா் தலைமையில் நாகை, திருவாரூா் மாவட்டங்களில் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.