வேளாண் சட்டம்: காத்திருப்பு போராட்டம் நடத்த இந்திய கம்யூ. முடிவு

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

சீா்காழி, கொள்ளிடம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சீா்காழியில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் மு. செல்லப்பன், கே.எஸ். சிவராமன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் பெ. வீரராஜ், நிா்வாகி அ. பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக் கோரியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலம் முன் டிச.14 ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com