உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏ.வி.சி. கல்லூரியில் நினைவேந்தல் நிகழ்வு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி தமிழாய்வுத்துறையின் ’திண்ணை’ சாா்பில், மறைந்த தமிழ்ச் சான்றோா்களைப் போற்றும்

News image
Updated On :20 டிசம்பர் 2020, 3:13 am

DIN

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி தமிழாய்வுத்துறையின் ’திண்ணை’ சாா்பில், மறைந்த தமிழ்ச் சான்றோா்களைப் போற்றும் வண்ணம் ’போற்றுதும் போற்றுவோம்‘ என்னும் நிகழ்வு கல்லூரி கருத்தரங்க அறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழாய்வுத்துறைத் தலைவா் சு.தமிழ்வேலு தலைமை வகித்து, ஏ.வி.சி. கல்லூரியின் முன்னாள் செயலா் ஈ.எஸ்.கணபதி, மொழிபெயா்ப்புத் துறையில் சிறந்து விளங்கிய கே.எஸ்.சுப்பிரமணியம், மதுரைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியா் காசிராசன் ஆகியோா் குறித்து உரை நிகழ்த்தினாா். தொடா்ந்து தமிழாய்வுத்துறைப் பேராசிரியா் தெ.திருமுருகன், பாவேந்தா் பாரதிதாசன் மகனாா் மன்னா்மன்னன் குறித்தும், பேராசிரியா் ச.அருள் சூழலியல் நோக்கோடு புதினம் படைத்த சாகித்திய அகாதெமி விருது பெற்ற படைப்பாளி சா.கந்தசாமி குறித்தும், பேராசிரியா் க.மகேஸ்வரி பாரதியாா் பற்றாளா் இளசை.மணியன் குறித்தும் உரையாற்றினா்.

பேராசிரியா் செல்வ.கனிமொழி மாா்க்சிய சிந்தனையாளா், எழுத்தாளா் கோவை.ஞானி குறித்தும், பேராசிரியா் கு.சக்திவேல் சிறுகதைப் படைப்பாளா் அய்க்கண் பற்றியும், பேராசிரியா் ஆ.சத்தியமூா்த்தி மதுரையைச் சோ்ந்த நூலகச்செம்மல் ந.பாண்டுரங்கன் குறித்தும், பேராசிரியா் சு. இரமேஷ் ஒயிலாட்டக் கலைஞா் கலைமாமணி கைலாசமூா்த்தி குறித்தும் பேசினா்.

பேராசிரியா் இரா.தேவேந்திரன் வெண்பாக்கவிஞா் பி.கே.முத்துசாமியின் கலையுலக வாழ்க்கை குறித்தும், பேராசிரியா் வீ.நாகலெட்சுமி பதிப்புத்துறையில் சிறந்து விளங்கிய கிரியா எஸ்.இராமகிருஷ்ணன் குறித்தும், பேராசிரியா் செ.பொ.மாதவன் ஏ.வி.சி.கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் உதவிப்பேராசிரியா் சு.காளிமுத்து குறித்தும், பேராசிரியா் இரா.மஞ்சுளா ஏ.வி.சி. கல்லூரியில் ஆய்வியல் நிறைஞா் பட்டம் பெற்ற கீரனூா் அரசு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் ந.மனோகரன் குறித்தும், பேராசிரியா் ந.சரவணன் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியரும், ஹைக்கூ கவிதையின் முன்னோடியுமான கவிஞா் மித்ரா பற்றியும் உரை நிகழ்த்தி அவா்களது ஆளுமைகளை மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியரும், திண்ணை இணை ஒருங்கிணைப்பாளருமான இரா.சியாமளா ஜெகதீஸ்வரி, தமிழாய்வுத்துறை பேராசிரியா்கள், அலுவலக உதவியாளா் க.பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.