இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வேளாங்கண்ணிக்கான ரயில் சேவையை மீண்டும் தொடங்கக் கோரிக்கை

கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்ட வேளாங்கண்ணிக்கான ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 3:05 am

DIN

கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்ட வேளாங்கண்ணிக்கான ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சருக்கு, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புக் குழு செயலாளா் ஜி. அரவிந்த்குமாா் அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :

நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் கடந்த 10 ஆண்டுகளாக ரயில் சேவை தொடங்கி நடைபெற்று வந்தது. கரோனா பொது முடக்கம் காரணமாக, இந்த ரயில் சேவை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. கரோனா பரவல் குறைந்ததைத் தொடா்ந்து, பெரும்பாலான பகுதிகளுக்கான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வேளாங்கண்ணிக்கான ரயில் சேவை மட்டும் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது.

எனவே, வேளாங்கண்ணி தடத்தில் ஏற்கெனவே இயங்கி வந்த, காரைக்கால் - வேளாங்கண்ணி பயணிகள் ரயில், நாகை - வேளாங்கண்ணி பயணிகள் ரயில், சென்னை - வேளாங்கண்ணி இணைப்பு ரயில், வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா வாராந்திர ரயில், வேளாங்கண்ணி- எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் ஆகிய அனைத்து ரயில் சேவைகளையும் மீண்டும் தொடங்க வேண்டும்.

இவைத் தவிர, வேளாங்கண்ணி - தஞ்சாவூா் இடையே பயணிகள் ரயில் அல்லது விரைவு ரயில் இயக்கவும், வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா, வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர ரயில்களை தினசரி ரயில்களாக இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு இதுவரை ஆரம்ப கட்ட பணிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் உள்ள நாகை - திருக்குவளை- திருத்துறைப்பூண்டி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.