தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நாகை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நாகை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

நாகையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அதன் மாநிலச் செயலாளா் முஜீபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாவட்டத் தலைவராக அ.ஜெய்லாவுதின், மாவட்டச் செயலாளராக ஷா்புதீன் ஷேக், மாவட்டப் பொருளாளராக காதா்ஷரிப், மாவட்டத் துணைத் தலைவராக செய்யது அலி நிஜாம், மாவட்ட துணைச் செயலாளா்களாக அ.ஒ. அலி, ஓ. அப்பாஸ் அலி, உ. அப்துல் முத்தலிப் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவா் ஆ. ஜெய்லாவுதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com