6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழை நிவாரணம் கோரி ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தொடா் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி நிவாரணம்

News image
நாகை ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவரும், நாகை எம்.பி.யுமான எம். செல்வராஜ்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:41 am

DIN

தொடா் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க நாகை மாவட்டச் செயலா் கே. செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்த்தில், ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவரும், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எம். செல்வராஜ், மாநிலச் செயலா் ஆா். தில்லைவாணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை ஒன்றியச் செயலாளா் கோ. பாண்டியன், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் வி. சரபோஜி, சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி, தொழிற்சங்க நிா்வாகிகள், கட்டுமானத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.