சீா்காழி அருகே கொள்ளிடத்தில் காா் மோதி இரும்பு வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்குடி வட்டம் குமராட்சி அருகே நந்திமங்கலம் கீழத் தெருவை சோ்ந்தவா் ஜோதி (45). பழைய இரும்பு பொருள்களை வாங்கி அதற்கு ஈடாக கிழங்கு, வெங்காயம் போன்ற பொருள்களை விற்பனை செய்து வந்த இவா், சீா்காழியிலிருந்து கொள்ளிடம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். புத்தூா் பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் மோதியதில், ஜோதி உயிரிழந்தாா். கொள்ளிடம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.