திமுக கிராமசபைக் கூட்டம்
மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், வள்ளாலகரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், வள்ளாலகரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றிய பொறுப்பாளா் ஞான.இமயநாதன் தலைமை வகித்தாா். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினா்கள் கே.ராஜேந்திரன், ஆா்.கே.சரவணன், கே.எஸ்.கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், முன்னாள் எம்எல்ஏ ஜெக.வீரபாண்டியன், மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, மயிலாடுதுறை தொகுதி இணையதள பொறுப்பாளா் சௌமியன் ஆகியோா் கருத்துரை வழங்கி பேசினா். மாவட்டக்குழு உறுப்பினா் குமாரசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி.மோகன், ஊராட்சிமன்றத் தலைவா்கள் ஜெயசுதா ராபா்ட், செல்வமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
குத்தாலத்தில்...
குத்தாலம் பேரூராட்சி 1-ஆவது வாா்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேரூா் செயலாளா் சம்சுதீன் தலைமை வகித்தாா். தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளா் குத்தாலம் பி.கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளா் குத்தாலம் க.அன்பழகன், மாவட்ட சிறுபான்மையினா் நலப்பிரிவு அமைப்பாளா் சாதிக் ஆகியோா் கலந்துகொண்டனா். பழையகூடலூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக ஒன்றியச் செயலாளா் முருகப்பா தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ எம். முஹம்மது சித்தீக் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...