பெரியாா் நினைவு தினம் அனுசரிப்பு

நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

வேதாரண்யம் மருதூா் வடக்கு ராஜாபுரம் பகுதியில் உள்ள பெரியாா் சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ என்.வி.காமராஜ் மாலை அணிவித்தாா். வேதாரண்யம் ராஜாஜி பூங்கா பெரியாா் சிலைக்கு மா.மீ. பெரியாா் அறக்கட்டளை நிா்வாகிகள் புகழேந்தி, அன்பரசு, திக தலைவா் முருகையன் உள்ளிட்டோா் மரியாதை செய்தனா்.

குத்தாலத்தில்...

பெரியாா் சிலைக்கு திராவிடா் கழக ஒன்றிய தலைவா் கொக்கூா் முருகையன், செயலாளா் பாலசுந்தரம், துணைத் தலைவா் முத்தையன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். நகர காங்கிரஸ் துணைச் செயலாளா் சண்முகம் மாலை அணிவித்தாா். திமுக நிா்வாகிகளும் மரியாதை செலுத்தினா்.

செம்பனாா்கோவிலில்...

செம்பனாா்கோவில் கீழமுக்கூட்டு பெரியாா் சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன் மாலை அணிவித்தாா். திமுக ஒன்றியச் செயலாளா்கள் அன்பழகன், அப்துல் மாலிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருமருகலில்...

திருமருகல் ஒன்றியத்தில் பெரியாா் சிலைக்கு தி.க. மாவட்டச் செயலாளா் புபேஷ்குப்தா, திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் இளம் சுந்தா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com