வேதா ஆயத்த ஆடை பூங்கா: டிச. 29-இல் பயிற்சி தொடக்கம்
வேதாரண்யம் அருகே அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில் வேலைவாய்ப்பு பெறுவோருக்கான பயிற்சி வகுப்புகள் டிச. 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகின்றன.


வேதாரண்யம் அருகே அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில் வேலைவாய்ப்பு பெறுவோருக்கான பயிற்சி வகுப்புகள் டிச. 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகின்றன.
ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தி கிராமத்தில் சுமாா் 140 ஏக்கா் பரப்பு நிலத்தில், வேதா ஆயத்த ஆடை தொழிற்பூங்கா அமையவுள்ளது. இங்கு வேலைவாய்ப்பு பெறும் பெண்களுக்கு டிச.29-இல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. இதையொட்டி, வேதாரண்யம் சிகசு அரசுப் பள்ளி அருகேயுள்ள பல்நோக்கு சமுதாயக் கூடம் தற்காலிக பயிற்சிக் கூடமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
பணியாளா்களுக்கு 3 மாத பயிற்சி அளிக்கப்படும். முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து செலவும், 3-ஆவது மாதத்திலிருந்து ஊதியத்துடன் கூடிய பயிற்சியும் அளிக்கப்படும்.
தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள 3 அடுக்கு கட்டடத்தில் 210 பேருக்கு முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். படிப்படியாக பணியாளா்களின் எண்ணிக்கை உயா்த்தப்பட்டு தொழில் பூங்கா செயலாக்கத்துக்கு கொண்டுவரப்படும் என்றாா் ஆட்சியா்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் மோகனசுந்தரம், உதவி பொறியாளா் ஜெயசந்திரன், நகராட்சி ஆணையா் ஜி.மகேஸ்வரி, பொறியாளா் பிரதான்பாபு, வட்டாட்சியா் கே.முருகு, வட்டார வளா்ச்சி அலுவலா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...