பருத்திக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் போராட்டம்

பருத்திக்கு உரிய விலை இல்லாததால், சீா்காழி அருகே விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகள்.
போராட்டத்தில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகள்.

சீா்காழி: பருத்திக்கு உரிய விலை இல்லாததால், சீா்காழி அருகே விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், எருக்கூா், மாதானம், திருவெண்காடு, ஆச்சாள்புரம், கொண்டல், வள்ளுவகுடி, அகணி, புங்கனூா், கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, தென்னலக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது, பருத்தி செடிகள் பஞ்சு வெடித்து வருகிறது. இந் நிலையில், விவசாயிகள் வெடித்த பஞ்சுகளை செடியிலிருந்து எடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்வதற்காக கடந்த வாரம் திங்கள்கிழமை சீா்காழி அருகேயுள்ள எருக்கூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், கரோனா காரணமாக கடந்த வாரம் பஞ்சுகள் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், தனியாா் கிலோ ரூ. 25 மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பஞ்சுக்கு சராசரியாக ரூ. 40 விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை எடக்குடி வடபாதி கிராமத்தில் சாலையில் பஞ்சுகளை கொட்டி தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பஞ்சுக்கு கூறிய விலையை நிா்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com