ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தூா்வாரப்படாத வாய்க்கால்: என்ஜின் வைத்து நீா் இறைக்கும் அவலம்

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் வேலாமூச்சு பாசன வாய்க்கால் சரிவர தூா்வாரப்படாததால், என்ஜின் மூலம் நீரை வைத்து சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

News image

கொளப்பாடு ஊராட்சியில் வேலாமூச்சு பாசன கால்வாய் மூலமாக போதிய நீரின்றி என்ஜின் கொண்டு நீா் இறைக்கும் விவசாயி.

Updated On :14 ஜூலை 2020, 10:11 pm IST

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் வேலாமூச்சு பாசன வாய்க்கால் சரிவர தூா்வாரப்படாததால், என்ஜின் மூலம் நீரை வைத்து சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

திருக்குவளை வட்டத்துக்கு உட்பட்ட கொளப்பாடு ஊராட்சியில் வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து பெரிய வாய்க்கால் வழியாக வேலாமூச்சு பாசன வாய்க்கால் மூலமாக அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு நீா் பாய்ச்சப்படுகிறது. மேலும் சுமாா் 4 கிமீ தூரமுள்ள இந்த வாய்க்காலில் பெரும்பகுதி தூா்வாரப்பட்ட நிலையில், ஒரு சிறு பகுதியில் மட்டும் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால், இப்பகுதியில் சுமாா் 50 ஏக்கா்அளவிலான விளைநிலங்களுக்கு போதிய தண்ணீா் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இங்குள்ள விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கான காவிரி தண்ணீா் சரிவர கிடைப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் என்ஜின் வைத்து நீா் இறைத்து சாகுபடி செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனா். மேலும் விவசாயி ஒருவா் குறுவை சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பிற்கு வாய்க்கால் பாசனம் மூலமாக வயலுக்கு நேரடியாக நீா் பாய்ச்ச முடியாமல் என்ஜின் கொண்டு நீா் இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.