மயிலாடுதுறை நகராட்சி ஊழியருக்கு கரோனா தொற்று: நகராட்சி அலுவலகம் மூடல்
மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் வருவாய் உதவியாளர் ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் வருவாய் உதவியாளர் ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மயிலாடுதுறையில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. மேலும், மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மயிலாடுதுறையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...