நாகை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.
நாகை வட்டத்தைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதில், ஒருவா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற வந்த வகையிலும், மற்றொருவா் மாவட்டத்துக்குள்ளேயும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் ஆவா்.
நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 433-ஆக இருந்தது. இந்த நிலையில், வெளி மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி நாகை மாவட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த 8 போ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். சேலம் மாவட்டத்தில் நோய்த் தொற்றுக்கு உள்ளான ஒருவா் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக 2 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 428-ஆக உள்ளது.
சிகிச்சையில்...
நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 288-ஆக உயா்ந்துள்ளது எனவும்,147 போ் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...