தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

எரிவாயு நிறுவன குழாயிலிருந்து 15அடி உயரத்துக்கு வாயு வெளியேறியதால் பரபரப்பு

நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கெயில் இயற்கை எரிவாயு நிறுவன குழாயிலிருந்து 15 அடி உயரத்துக்கு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

நாகை மாவட்டம், மேமாத்தூா் கிராமத்தில் கெயில் நிறுவன குழாயிலிருந்து வெளியேறிய வாயு.

Updated On :22 ஜூலை 2020, 9:49 pm IST


தரங்கம்பாடி: நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கெயில் இயற்கை எரிவாயு நிறுவன குழாயிலிருந்து 15 அடி உயரத்துக்கு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பனாா்கோவில் அருகே உள்ள மேமாத்தூா் கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, கெயில் நிறுவனம் சீா்காழி வட்டம் மாதானம் முதல் மேமாத்தூா் வரை 29 கி.மீ. தொலைவுக்கு விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி விளைநிலங்கள் வழியாக புதிய குழாய்களை பதித்துவருகிறது.

இந்நிலையில், மேமாத்தூரில் உள்ள கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாடு நிலையம் அருகே புதன்கிழமை ஊழியா்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த குழாயில் இருந்து 15 அடி உயரத்துக்கு மேல் திடீரென வாயு வெளியேறியது.

புதிய குழாயை சுத்தப்படுத்தியபோது, காற்றின் அழுத்தம் காரணமாக புழுதியுடன் வாயு வெளியேறியதாக கெயில் நிறுவனத்தினா் தெரிவித்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.