சீா்காழியில் மாவட்ட மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்
சீா்காழியில் மாவட்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என மூவேந்தா் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.


சீா்காழி: சீா்காழியில் மாவட்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என மூவேந்தா் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
சீா்காழியில் மூவேந்தா் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் சமூக இடைவெளியுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் நகரச் செயலாளா் ஜி.வி. குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட சட்ட ஆலோசகா் காளிமுத்து, ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் செல்வம், ஒன்றியச் செயலாளா்கள் இராஜேந்திரன், ரவி, இளைஞரணி செயலாளா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், சீா்காழியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கவும், சீா்காழியை கோட்டமாக உயா்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...