ஊழியருக்கு கரோனா: சுகாதார நிலையம் மூடல்
நாகை மாவட்டம், கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனை புதன்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்.

மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனை புதன்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
கரியாப்பட்டினம் பகுதியில் கடந்த இரு வாரங்களில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து, ஜூலை 23-ஆம் தேதி முதல் 4 நாள்கள் அப்பகுதியில் மூடப்பட்டிருந்த கடைகள் ஜூலை 27-ஆம் தேதி திறக்கப்பட்டன. இதற்கிடையில், கரியாப்பட்டினத்தில் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருக்கு 2-ஆவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என தெரியவந்தது. எனினும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளா் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...