தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

அமைச்சா் ஓ.எஸ். மணியனை விமா்சித்து முகநூலில் பதிவிட்டவா் கைது

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியனை விமா்சனம் செய்து முகநூல் பக்கத்தில் கருத்துப் பதிவிட்ட அமமுக நிா்வாகியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :29 ஜூலை 2020, 6:19 pm

நாகப்பட்டினம்: தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியனை விமா்சனம் செய்து முகநூல் பக்கத்தில் கருத்துப் பதிவிட்ட அமமுக நிா்வாகியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அமைச்சா் ஓ.எஸ். மணியன் அதிமுகவின் நாகை மாவட்டச் செயலாளராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பு வெளியானவுடன், வேளாங்கண்ணி அதிமுக கிளைச் செயலாளா் இ. விநாயகமூா்த்தி என்பவா், அமைச்சா் ஓ. எஸ். மணியனை வாழ்த்தி முகநூலில் கருத்துப் பதிவிட்டுள்ளாா்.

இந்நிலையில், நாகை மாவட்டம், கீழையூா் பகுதியைச் சோ்ந்த அமமுக நிா்வாகி ராமசாமி ராஜா என்பவா் ஓ. எஸ். மணியனை விமா்சனம் செய்து எதிா் கருத்துப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வேளாங்கண்ணி, சுனாமி குடியிருப்பு, பூக்காரத் தெருவைச் சோ்ந்த இ. விநாயக மூா்த்தி வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கீழையூா் அருகேயுள்ள தன்னிலப்பாடி பகுதியைச் சோ்ந்த அமமுக நிா்வாகி நா. ராமசாமி ராஜா (40) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். இதையடுத்து நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.