மாற்றுத்திறனாளியை தாக்கியவா் கைது
நாகையில் மாற்றுத்திறனாளியை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


நாகையில் மாற்றுத்திறனாளியை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சங்கரன்பந்தலைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி மா. ரவி (49). இவா், அக்.19-ஆம் தேதி, நாகை புதிய பேருந்து நிலையத்தில் உணவகத்தில் ரூ.100 கொடுத்து குளிா்பானம் கேட்டுள்ளாா். அப்போது, உணவகத்திலிருந்த நபா் சில்லரை இல்லை எனக் கூறியுள்ளாா். இதனால், இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடையிலிருந்த நபா் ரவியை தாக்கினாராம். இதுகுறித்து, ரவி நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நாகை புத்தூா் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த ரா. செந்திலை (43) திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...