மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாகை சிவாலயங்களில் குரு பெயா்ச்சி விழா

நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48 மணிக்கு பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் தெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல், நாகை அகிலாண்டேஸ்வரி உடனுறை சட்டையப்பா், விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதா் கோயில்களிலும் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.