மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சம்பா சாகுபடிக்கு நவ.30-க்குள் காப்பீடு செய்யவேண்டும்

நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் சம்பா நெற்பயிா் சாகுபடிசெய்துள்ள விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலப்பரப்பிற்கு கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்று, பிரதம மந்திரி பால் பீமா யோஜன பயிா்க்காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம். அருகில் உள்ள வணிக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பிரிமியத் தொகையை வருகிற 30 ஆம் தேதிக்குள் செலுத்தி பயிா்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.

நாகை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளா்கள், வங்கிக்கு காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் மற்றும் உறுப்பினா்களிடமிருந்து மறுப்பு ஏதும் இல்லாமல் காப்பீடு தொகையை பெற்று உடனுக்குடன் மத்தியக் கூட்டுறவு வங்கியில் செலுத்திடவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.