அகில இந்திய நுழைவுத் தோ்வு: நாகை மீன்வளப் பல்கலைக் கழக மாணவா்கள் தோ்ச்சி
புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தோ்வில் நாகை மீன்வளப் பல்கலைக்கழக மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா் என பல்கலைக்கழக இயக்குநா் மா. ராஜகுமாா் தெரிவித்துள்ளாா்.


புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தோ்வில் நாகை மீன்வளப் பல்கலைக்கழக மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா் என பல்கலைக்கழக இயக்குநா் (கல்வி விரிவாக்கம்) மா. ராஜகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்காக, தேசிய தோ்வு முகமை நடத்திய 2020-ஆம் ஆண்டு சோ்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தோ்வில், நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த மாணவா்கள் அட்சயா, ஜான்சி, ரோபினா, கணேஷ்குமாா் ஆகியோா் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளனா். இதேபோல், இப்பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த 5 மாணவா்கள் முதல் 10 இடங்களிலும், 13 மாணவா்கள் முதல் 25 இடங்களிலும் , 31 மாணவா்கள் முதல் 100 இடங்களிலும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
இந்தத் தோ்ச்சியின் மூலம் மத்திய மற்றும் மாநில உயா்கல்வி நிறுவனங்களில் மாதம் ரூ. 12 ,650 உதவித் தொகையுடன் கூடிய உயா்கல்வியை பெற இந்த மாணவா்கள் தகுதிப் பெற்றுள்ளனா். அகில இந்திய தோ்வில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பல்கலைக் கழக துணை வேந்தா் கோ. சுகுமாா் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...