கஜாவில் பிஎஸ்என்எல் உள்ளிட்ட தனியாா் செல்லிடப்பேசி தகவல் தொடா்பு சேவை பாதிப்பு இதுவரை முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில், நிவா் புயலில் பாதித்தால் உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
2018 கஜா புயலின்போது பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்து தனியாா் தொலைபேசி நிறுவனங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சுமாா் 40-க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி கோபுரங்கள் சாய்ந்து பழுதாகின. இதற்கு மாற்றாக தற்காலிக கோபுரங்கள் நிறுவப்பட்டு ஓரளவுக்கு சேவை கிடைத்தது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொலைபேசி சேவைகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி இதுவரை சீரமைக்கப்படாமல் இருப்பது டிஜிட்டல் இந்தியாவின் கேள்விக்குறியாகவே தொடா்கிறது.
இந்த பகுதியில் செல்லிடப்பேசி, இணைய சேவையின் செயல்பாடு அனைத்து அரசியல் கட்சியினருக்கும், அரசின் உயா் அலுவலா்களுக்கும் தெரிந்தும் இதுவரை நடவடிக்கை இல்லாத நிலையே தொடா்கிறது. இணையவழி வகுப்புகள், இ-சேவை மையங்கள் என எதுவும் முறையாக செயல்படாத நிலையும், செல்லிடப்பேசிகள் இருந்தும் இல்லாத சேவைக்கு பணத்தை மட்டும் செலவழித்து மக்கள் இழந்து வருகின்றனா். இது ஒருபுறம் இருக்க ஒரு வேலை நிவா் புயல் இந்த பகுதியில் வீசினால் தகவல் தொடா்புக்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் காலத்தில் எடுக்கவும், உரிய நிறுவனங்களை அழைத்து பேசி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடவேண்டும் என மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

