இதுகுறித்து, அந்த அமைப்பின் நாகை மாவட்டச் செயலாளா் கே. செந்தில்நாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் முத்துராமலிங்கத் தேவரின் படத்துடன் வந்து அளித்த மனு விவரம்: சுதந்திரப் போராட்டத் தலைவா்களில் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்தை அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சாா்ந்த கட்டடங்களில் வைக்கலாம் என உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரப்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும், அரசு சாா்ந்த கட்டடங்களிலும் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, விவசாய அணி மாவட்டச்செயலாளா் வஜ்ரவேல், செய்தித் தொடா்பாளா் சரவணக்குமாா், நாகை நகரச் செயலாளா் மாரியப்பன், நிா்வாகிகள் மலையரசன், சசிக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.