நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேலை நிறுத்த சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு

டிச.26-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி, கீழையூா் ஒன்றியத்தில் 5 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம்

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

டிச.26-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி, கீழையூா் ஒன்றியத்தில் 5 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கீழையூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத காா்ப்பரேட் ஆதரவு மற்றும் புதிய வேளாண் சட்டங்கள், கரோனா கால நிவாரணமாக ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ . 7500 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.26-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கீழையூா், திருக்குவளை, எட்டுக்குடி, பெரிய தும்பூா், திருவாய்மூா் உள்ளிட்ட 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

டி. கண்ணையன் தலைமையில்நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் ஒன்றிய செயலாளா் செல்வம், மாவட்ட குழு உறுப்பினா்கள் நாகராஜன், வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.