எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சீர்காழியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக தொழில்நுட்ப அணி சார்பாக ஊராட்சி ஒன்றிய மற்றும் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

News image
சீர்காழியில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டம்.
Updated On :20 செப்டம்பர் 2020, 10:59 am

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக தொழில்நுட்ப அணி சார்பாக ஊராட்சி ஒன்றிய மற்றும் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் ஆலோசனையின் பேரில்  நாகை மாவட்ட திமுக தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் முன்னிலையில் சீர்காழி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் மாநில செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். 

ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவை வெற்றி பெறச் செய்வது குறித்து தொழில்நுட்ப அணியின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் பன்னீர்செல்வம், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகர், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார் மலர்விழி திருமாவளவன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.