திமுக ஒன்றியச் செயலாளர் நில அபகரிப்பு வழக்கில் கைது: கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நிலஅபகரிப்பு வழக்கில், கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திமுக சார்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


நிலஅபகரிப்பு வழக்கில், கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திமுக சார்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஸ்ரீ ரஜதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்கள், அரசுப் புறம்போக்கு நிலங்கள் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான இடங்கள் சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு வணிக வளாகம், விடுதி ஆகியவை கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக நாகை நகர செயலாளர் தங்க.கதிரவன் கடந்த 14- ஆம் தேதி நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டு, வேளாங்கண்ணி ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்தவரும், கீழையூர் ஒன்றிய திமுக செயலாளருமான ஏ. தாமஸ்ஆல்வா எடிசன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 6 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஏ.தாமஸ் ஆல்வா எடிசனை புதன்கிழமை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து, நாகை தெற்கு மாவட்ட திமுக சார்பில், இந்த ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை காவல்துறை ரத்து செய்ய வேண்டும், நிலஅபகரிப்பு தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் என்.கெளதமன் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் பி. பன்னீர்( நாகை) செந்தில்குமார் (நாகூர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் கட்சியினர் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...