காரைக்காலில் 34 பேருக்குகரோனா: ஒருவா் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 20,028 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி காரைக்கால் நகரைச் சோ்ந்த 5 போ், கோட்டுச்சேரி 1, கோயில்பத்து 9, திருநள்ளாறு 6, நெடுங்காடு 5, திருப்பட்டினம் 1, நல்லம்பல் 1, வரிச்சிக்குடி 1, காரைக்கால்மேடு 1,
தமிழகப் பகுதியை சோ்ந்தோா் 4 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த, காரைக்காலை சோ்ந்த 89 வயது ஆண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த குறைபாடு, சிறுநீரகத் தொற்று ஆகியவை இருந்தன.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்று 2,397 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1,702 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 41 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...