வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு: திரளானோர் பங்கேற்பு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய கலையரங்கில் பெரிய வியாழன் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய கலையரங்கில் பெரிய வியாழன் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் தவக்கால முக்கிய நிகழ்வாக இந்த வழிபாடு நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இந்த வழிபாட்டில், பேராலய பங்குத்தந்தை சீடர்களின் பாதத்தை கழுவி முத்தமிடுவது வழக்கம். நிகழாண்டில், கரோனா தொற்று பரவலின் காரணமாக பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...