ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு: திரளானோர் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.

News image
வேளாங்கண்ணியில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு.
Updated On :2 ஏப்ரல் 2021, 1:51 pm

DIN

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.

மகிமைகளாலும், புதுமைகளாலும் உலகப் புகழ் பெற்ற பேராலயங்களில் ஒன்றாக விளங்குகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் இப்பேராலயம் பசலிக்கா அந்தஸ்து பெற்றது. 

இங்கு, வெள்ளிக்கிழமை மாலை புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள்   நடைபெற்றன. முதல் நிகழ்ச்சியாக, இறைவார்த்தை வழிபாடு,  பொது மன்றாட்டு நடைபெற்றது.  பின்னர்,  சிறப்பு மறையுரை,  சிலுவைப் பாதை நிறைவேற்றுதல் ஆகியன திருச்சிலுவை ஆராதனைகளாக நடைபெற்றன.

Story image

பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் தலைமையில், பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜெயராஜ் ஆகியோர் வழிபாடுகளை ஒருங்கிணைத்தனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.