வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
கீழையூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.


கீழையூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை புது மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் என்பவரது மகன் ஜான்சன் (25). இவா், சனிக்கிழமை இரவு கீழையூா் அருகே கீழஈசனூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, முத்துப்பேட்டைக்கு திரும்புவதற்காக, ஈசனூா் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பயணிகள் நிழலகம் அருகே பேருந்துக்காக காத்திருந்தாராம்.
அப்போது, அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே ஜான்சன் உயிரிழந்தாா்.
தகவலறிந்த கீழையூா் போலீஸாா் அங்கு வந்து, ஜான்சன் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...