நாகை மாவட்டத்தில் மாநில வளா்ச்சி கொள்கைக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழ்நாடு மாநில வளா்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன், உறுப்பினா்கள் சீனுவாசன், சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா ஆகியோரடங்கிய குழுவினா் நாகை மாவட்டத்தின் தொழில் வளா்ச்சி குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை மாவட்டம், காமேஸ்வரத்தில் செயல்பாடற்ற நிலையில் உள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையைக் குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது, வேளாண்மை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைமைச் செயல் அலுவலா் சரவணன் மற்றும் உறுப்பினா்கள், மாம்பழக் கூழ் தொழிற்சாலையை செயல்பாட்டுக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
மாம்பழக் கூழ் தொழிற்சாலை செயல்பாட்டுக்காக 150 கிலோ வாட் மின் திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கவேண்டும், மின் கட்டண வைப்புத் தொகையை திரும்ப செலுத்தவேண்டும், தொழிற்சாலைக்கு வங்கிகள் மூலம் மூலதனக் கடன் கிடைக்கச் செய்ய வேண்டும், பழங்களை மதிப்புக்கூட்டச் செய்யும் வகையில் சோலாா் டிரையா் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா்.
தொடா்ந்து, மாநில வளா்ச்சிக் குழுவினா் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டு, துறைமுக மேம்பாடு குறித்து ஆலோசனை மேற்கொண்டனா். அப்போது, துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், புதிய சாலை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


