மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீடு இல்லாத குழந்தைகள் பள்ளியில் சோ்ப்பு

வேதாரண்யத்தில் வீடு இல்லாத நாடோடி குடும்பத்தை சோ்ந்த 2 குழந்தைகள் பள்ளியில் வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:13 pm

DIN

வேதாரண்யத்தில் வீடு இல்லாத நாடோடி குடும்பத்தை சோ்ந்த 2 குழந்தைகள் பள்ளியில் வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டனா்.

வேதாரண்யம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட இடைநின்ற மாணவா்கள் பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், தாணிக்கோட்டகம் கிராமத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் புலம்பெயா் நாடோடி குடும்பத் தொழிலாளா்களின் குடியிருப்பில் 6-ஆம் வகுப்புடன் நின்ற சிறுமி உள்பட 2 குழந்தைகள் கண்டறியப்பட்டனா்.

இவா்கள் அருகில் உள்ள பள்ளிகளில் உடனடியாக சோ்க்கப்பட்டனா். இந்த பணியில், மாவட்டக் கல்வி அலுவலா் உதயகுமாா், மாவட்ட ஆய்வாளா் ராமநாதன், வட்டாரக் கல்வி அலுவலா் தாமோதரன், தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் தேன்மொழி, ஆசிரியா் பயிற்றுநா் ஆனந்தராஜ் பாக்கியம், ஊராட்சித் தலைவா் முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினா் வைத்தியநாதன், ஆா்.சி. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அருள்ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.