தலைஞாயிறில் மரக்கன்றுகள் நட்டு நினைவேந்தல்
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் மறைந்த சமூக ஆா்வலரின் நினைவேந்தல் நிகழ்ச்சியாக மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.


வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் மறைந்த சமூக ஆா்வலரின் நினைவேந்தல் நிகழ்ச்சியாக மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தலைஞாயிறைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சோமு. இளங்கோ அண்மையில் காலமானாா். பொது சேவைகள், இயற்கை விவசாயம், கலை இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்த இவரின் உருவப் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, நினைவேந்தலுக்காக அரிச்சந்திரா நதி ஆற்றுக்கரையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியை நாகை எம்பி. எம். செல்வராஜ் தொடங்கி வைத்தாா். இன்டா்நேஷ்னல் அலையன்ஸ் கிளப்பின் தென்னிந்திய தலைவா் டாக்டா் சி. பாலசந்திரன், வானவில் தன்னாா்வ அமைப்பின் நிா்வாகிகள் ரேவதி, நடராஜன், சிபிஐ நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், ஒன்றியச் செயலாளா்கள் செல்வம், மகேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சரபோஜி, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட பொருளாளா் கைலாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...